/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வயிற்று வலி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை வயிற்று வலி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
வயிற்று வலி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
வயிற்று வலி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
வயிற்று வலி கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
ADDED : செப் 17, 2025 07:04 AM
புதுச்சேரி : வயிற்றுவலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்ட 2 குழந்தைகளின் தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உழவர்கரை, வயல்வெளி நகரை சேர்ந்தவர் ஜான், 38; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா,31; இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 29ம் தேதி ஜான் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக, பிரியங்காவை மூலகுளத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிரியங்கா கடந்த 5ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது பெற்றோர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பிய பிரியங்காவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடன் அவரை, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து ஜான் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.