/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை; திருபுவனையில் கடன் சுமையால் விபரீத முடிவு குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை; திருபுவனையில் கடன் சுமையால் விபரீத முடிவு
குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை; திருபுவனையில் கடன் சுமையால் விபரீத முடிவு
குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை; திருபுவனையில் கடன் சுமையால் விபரீத முடிவு
குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாய் தற்கொலை; திருபுவனையில் கடன் சுமையால் விபரீத முடிவு
ADDED : செப் 01, 2025 12:19 AM
திருபுவனை : கடன் சுமையால், குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்துவிட்டு பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், திருபுவனை தோப்புத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்; டிரைவர். இவரது மனைவி அபிராமி, 33; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, 11 வயது மற்றும் 6 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுரேஷ் பைனான்ஸ் மூலம் லாரி வாங்கி ஓட்டினார். தவணை தொகை செலுத்தாததால், பைனான்ஸ் நிறுவனம் லாரியை பறிமுதல் செய்தது.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். மனைவி புகாரில், திருபுவுனை போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.
இந்நிலையில், சுரேஷ் அவரது அக்காவின் சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து லாரி வாங்கியதால், கடன் வாங்கி அந்த பத்திரத்தை குடும்பத்தார் மீட்டுள்ளனர். இதனால் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் மனமுடைந்த அபிராமி, கடந்த 29ம் தேதி இரவு தனது இரண்டு குழந்தைகளில். 11 வயதுடைய குழந்தைக்கு துாக்க மாத்திரை கொடுத்து துாங்க வைத்துவிட்டு, அபிராமி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று முன்தினம் காலை துாக்க மாத்திரை சாப்பிடாத குழந்தை எழுந்து பார்த்தபோது, தாய் இறந்திருப்பது தெரியவந்து கதறி அழுதுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மயக்க நிலையில் இருந்த துாக்கமாத்திரை கொடுக்கப்பட்ட குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகளை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அபிராமி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னுடன் ஒரு குழந்தையை மட்டும் அழைத்துச் செல்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.