Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதுகலை பட்டப்படிப்பிற்கு 'மாப் அப்' கலந்தாய்வு

முதுகலை பட்டப்படிப்பிற்கு 'மாப் அப்' கலந்தாய்வு

முதுகலை பட்டப்படிப்பிற்கு 'மாப் அப்' கலந்தாய்வு

முதுகலை பட்டப்படிப்பிற்கு 'மாப் அப்' கலந்தாய்வு

ADDED : செப் 07, 2025 02:37 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான மாப் அப் கலந்தாய்வு வரும் 9ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்புகளில் (எம்.டெக், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,) சேர்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் 9ம் தேதி இறுதி கட்டமாக மாப்-அப் கலந்தாய்வு நடக்கிறது.

புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம். பங்கேற்க வரும் மாணவர்கள் (மதிப்பெண், பெறப்பட்ட பட்டம், இருப்பிடம், ஜாதி) அனைத்து அசல் சான்றிதழ்களையும், நகல்களையும் கொண்டு வர வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பிக்காமல் முதல் முறையாக நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் ரூ.1,000 இணைய வழி மூலமாக பணம் செலுத்த வேண்டும்.

அதன்படி, எம்.டெக், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளுக்கு வரும் 9ம் தேதி 9:00 மணிக்கும், எம்.பி.ஏ., படிப்பிற்கு காலை 11:00 மணிக்கும், நிர்வாக கட்டடம், இரண்டாம் தளம், 3வது ஹாலில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கவும்.

மேலும், விபரங்களுக்கு www.pgacpdy.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us