ADDED : மே 19, 2025 06:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி செஞ்சி சாலையில் இலவம் பஞ்சு மரத்தில் இருந்து பறந்த இலவம் பஞ்சுகளை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் அடித்து சரிசெய்தனர்.
புதுச்சேரி செஞ்சி சாலை, அங்காடி மற்றும் ஜிப்மர் நகர பிரிவு மருத்துவ மையத்திற்கு இடையே சாலையில் உள்ள இளவம் பஞ்சு மரத்தில் இருந்து, பஞ்சு காய்ந்து வெடித்து, காற்றி பறந்து வந்தது. இதனால் அவ்வழியாக சென்று வரும்வாகன ஓட்டிகள், பொதுமக்கள்அவதியடைந்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மரத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் அனைத்து பஞ்சுகளும் தரையில் விழுந்தது.