/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியல் போராட்டத்தால் பரபரப்பு
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியல் போராட்டத்தால் பரபரப்பு
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியல் போராட்டத்தால் பரபரப்பு
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியல் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:29 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவலர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுடன் கல்வித்துறை அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
லாஸ்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை போக்க வலியுறுத்தி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமியை சந்தித்து மனு அளிக்க அலுவலகம் சென்றனர்.
அவர், இல்லாததால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரது அறையின் எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., கல்வித்துறை அலுவலகம் முன் தனது ஆதரவாளர்களுடன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, மறியலில் ஈடுபட்ட வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,விடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், பரபரப்பு நிலவியது.