/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியர்ஸ் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் அரியர்ஸ் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
அரியர்ஸ் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
அரியர்ஸ் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
அரியர்ஸ் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2025 03:23 AM
புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் காங்., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
தொழில்நுட்பக்கல்வி, பலவகை தொழில்நுட்பக்கல்வி, பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்வு எழுதுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை முடித்து அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாமல் அரியர்ஸ் வைத்துள்ளவர்களுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் ஒரு அரசாணை வெளியிட்டு வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரியிலும் வழங்க முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக்கல்வி முடித்த நிறைய மாணவர்கள் அரியர்ஸ் வைத்துள் ளனர்.
மேலும் அவர்களுக்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு இதுபோல சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் குடும்பத்தின் பட்டப்படிப்பு கனவும் நிறைவேறும்.
தமிழகத்தில் வெளியிட்டுள்ள அரசாணையை அடிப்படையாக கொண்டு புதுச்சேரி மாநிலத்திலும் இதுபோன்று ஒரு முறை வாய்ப்பு வேண்டும்.