ADDED : மே 12, 2025 02:11 AM

திருபுவனை: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் டி.பி.ஜி., நகரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டின் மேல்அருகில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்தது.
இதில் வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்டி, அகற்றவும், வில்லியனுார் தாசில்தாரிடம் அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கவும்வலியுறுத்தினார்.