/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : செப் 17, 2025 07:20 AM

புதுச்சேரி: ஏம்பலத்தில் என்.ஆர்.பவள விழா வாரச் சந்தையை, லட்சுமிகாந்தன் எம். எல்.ஏ., திறந்து வைத்தார்.
ஏம்பலம் திருவள்ளுவர் நகரில், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் போன்ற பொருட்களை குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்கி பொது மக்கள் பயன் பெறும் வகையில், என்.ஆர். பவள விழா வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இதன், திறப்பு விழா நடந்தது. லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,. கலந்து கொண்டு வாரச்சந்தை பெயர் பலகை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், என்.ஆர்.காங்., தொகுதி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வாரம் தோறும் திங்கள் கிழமை நடைபெறும் வாரச் சந்தையில், ஏம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.