Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : ஜூன் 07, 2025 02:39 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை பணியினை அசோக்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி நகராட்சி சார்பில், முதலியார்பேட்டை தொகுதி, உழந்தை கீரப்பாளையம், அய்யனார் கோவில் வீதி, குறுக்கு வீதிகளுக்கு, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் ரூ. 19 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலையுடன் வாய்கால் கட்டப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அசோக் பாபு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் சிவபாலன், துணை பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், உழந்தை கீரபாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ், பூபாலன், கணேசன், முருகையன், கங்காதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள், விஜயகுமார், திரிச்சந்திரன், பாண்டுரங்கம், சரவணன், ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.