Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

ADDED : மார் 28, 2025 05:21 AM


Google News
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;

ராமலிங்கம் (பா.ஜ): திருக்காஞ்சி கங்கை நதீஸ்வரர் கோவில் ஆற்று பகுதியில் மிக உயர சிவன் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது. இந்த புனித தலத்தில் சுவாமி சிலையை நிறுவி, திறக்க பிரதமரை அழைக்கலாம்.

முதல்வர் ரங்கசாமி: நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் சிலை போன்றவற்றை நிறுவதற்கு, மத்திய மாநில அரசுகளின் அனுமதி தேவை என்பதால் இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்.

அமைச்சர் தேனீஜெயக்குமார்: நீங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரி 108 அடி உயரத்தில் சுவாமி சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முதல் தளம் வரை பணி முடிந்துள்ளது.

ராமலிங்கம்: புதுச்சேரியில் எந்தந்த கோவில்களில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது.

முதல்வர் ரங்கசாமி: தற்போது கோவில் நிதி, தனிநபர்கள், நிறுவனங்கள் பங்களிப்போடு 10 கோவில்களில் நடைமுறையில் உள்ளது. வில்லியனுார் கோகிலாம்பிகை திருக்காமீஸ்வரர் கோவிலில் மட்டும் தனியார் நிறுவனத்தால் அன்னதானம் தினசரி வழங்கப்படுகிறது. மற்ற கோவில்களில் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.

கல்யாணசுந்தரம் (பா.ஜ): டிபாசிட் தொகை திட்டத்தை செயல்படுத்தினால் பலரும் நிதியுதவி தருவர். அதை கொண்டு பல கோவில்களில் தினசரி கூட அன்னதானம் கொடுக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us