/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார் நம்பிக்கையுடன் அமைச்சர் ஜான்குமார் நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார் நம்பிக்கையுடன் அமைச்சர் ஜான்குமார்
நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார் நம்பிக்கையுடன் அமைச்சர் ஜான்குமார்
நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார் நம்பிக்கையுடன் அமைச்சர் ஜான்குமார்
நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார் நம்பிக்கையுடன் அமைச்சர் ஜான்குமார்
ADDED : செப் 19, 2025 03:37 AM
புதுச்சேரி: நேரம் பார்த்துதான் சாமி இலாகா கொடுப்பார். அதுவரை தொந்தரவு செய்ய மாட்டேன் என, அமைச்சர் ஜான்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் பா.ஜ.,அமைச்சர் சாய் சரவணன்குமார் பதவி பறிக்கப்பட்டு, ஜான்குமார் அமைச்சராக நியமிக்கப்பட்டு, ஜூலை 15ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
வழக்கமாக அமைச்சர் பதவி ஏற்புக்கு பின் மாலையில் இலாகா ஒதுக்கப்படும். ஆனால் ஜான்குமார் பதவியேற்று 2 மாதங்கள் ஆகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை.
இது தொடர்பாக அமைச்சர் ஜான்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
அவருக்கென்று (முதல்வர்) ஒரு நேரம் உள்ளது. அதனால், டைம் பார்த்து சாமி இலாகா ஒதுக்கி கொடுப்பார். அவருடைய சொந்த கட்சி அமைச்சருக்கு கூட 139 நாட்களுக்கு பிறகு தான் இலாகா கொடுத்தார்.
அவருக்கும் சீக்கிரமாக கொடுத்திருக்க வேண்டும். எனக்கு சீக்கிரம் கொடுக்காதது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது.
இருப்பினும், முதல்வர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. இலாகா கேட்டு அவருடைய மனதை சங்கடப்படுத்த மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. சோதனை காலத்தை வெற்றியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுள்ளனர்.எனவே, முதல்வர் எனக்கும் விரைவில் இலாகா அறிவிப்பார் என. நம்பிக்கையில் இருக்கிறேன்.
இவ்வாறு ஜான்குமார் கூறினார்.