/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு சுற்றுலா கப்பல் வருகை அமைச்சர் தலைமையில் ஆலோசனை புதுச்சேரிக்கு சுற்றுலா கப்பல் வருகை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரிக்கு சுற்றுலா கப்பல் வருகை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரிக்கு சுற்றுலா கப்பல் வருகை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரிக்கு சுற்றுலா கப்பல் வருகை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
ADDED : ஜூலை 02, 2025 07:25 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா கப்பலை வரவேற்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரிக்கு வரும் 4ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை--விசாகப்பட்டினம், புதுச்சேரி-சென்னை கடல் மார்க்க வழித்தடத்தில் இயங்கும் குரூஸ் பாரத் மிஷனின்” கோர்டெலியா சுற்றுலா கப்பல் வர உள்ளது. இதனை சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்கும் விதமாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் புதுச்சேரி சுற்றுலாத்துறை மூலம் கடலோர பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கடல் வழியாக வரும் பார்வையாளர்களை ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தோ ஆசிரமம் மற்றும் பாரடைஸ் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு தனித்தனியாக செல்ல சொகுசு பேருந்துகள் மற்றும் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பல் மூலம் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர், இதன் மூலம் புதுச்சேரியை இந்தியாவின் ஏழாவது உள்நாட்டு கப்பல் பயண இடமாகக் குறிக்கிறது.
கப்பல் பயணங்கள் துறைமுக கட்டணம், உள்ளூர் கொள்முதல் மற்றும் கடற்கரை சுற்றுலா சேவைகள் மூலம் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என ஆலோசிக்கபட்டது. கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., சுற்றுலாத்துறை இயக்குநர், உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.