ADDED : ஜன 29, 2024 04:23 AM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி எலைட்ஸ் மூலம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் லதா தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் தலைவர் பச்சைநாயகம் முன்னிலை வகித்தார். கல்வி உளவியல் நிபுணர் கோபால், தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும், மாணவர்களின் வாழ்க்கைத் திறன்கள் மற்றும் கல்லுாரி கல்வி வழிகாட்டுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் இளங்கோ,சந்திரசேகர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அசோக், ஷாலினி, பத்மாவதி, ஜானகிராமன் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி விரிவுரையாளர் ராஜாநன்றி கூறினார்.