/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவக்கம் விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவக்கம்
விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவக்கம்
விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவக்கம்
விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவக்கம்
ADDED : மே 18, 2025 02:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் புதுச்சேரி விமான நிலையத்தில் மருத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது.
மருத்துவ மையத்தை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் சேர்மன் முருகேசன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
இதில், மருத்துவமனை மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ மையத்தில் அவசர கால தேவையையும், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தங்களது சுகாதார தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் ஏதுவாக அமையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.