/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாந்திகிரி சித்தா மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம் சாந்திகிரி சித்தா மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்
சாந்திகிரி சித்தா மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்
சாந்திகிரி சித்தா மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்
சாந்திகிரி சித்தா மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 14, 2025 01:17 AM
புதுச்சேரி : புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவ மனையில் இன்றும், நாளையும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளையான அரபிந்தோ வீதியில் உள்ள சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் இன்று 14ம் தேதி மற்றும் நாளை 15ம் தேதியும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை நடக்கிறது.
முகாமில் கழுத்து, இடுப்பு, மூட்டுவலி, கீழ் வாதம், எலும்பு தேய்மானம், நீரிழிவு சிக்கல்கள், சோரியாசிஸ், தோல் நோய், மன அழுத்தம் மற்றும் துாக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரளாவில் புகழ்பெற்ற சிறப்பு ஆயுர்வேத டாக்டர் அதுல்யா சிகிச்சை அளிக்க உள்ளார். 0413 4209898, 2225898, 9585535898 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.