/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாஸ்டர்ஸ் கிரிக்கெட் புதுச்சேரி வடக்கு, மேற்கு, மாகி அணிகள் வெற்றிமாஸ்டர்ஸ் கிரிக்கெட் புதுச்சேரி வடக்கு, மேற்கு, மாகி அணிகள் வெற்றி
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் புதுச்சேரி வடக்கு, மேற்கு, மாகி அணிகள் வெற்றி
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் புதுச்சேரி வடக்கு, மேற்கு, மாகி அணிகள் வெற்றி
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் புதுச்சேரி வடக்கு, மேற்கு, மாகி அணிகள் வெற்றி
ADDED : ஜன 31, 2024 02:15 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி வடக்கு, மேற்கு மற்றும் மாகி அணிகள் வெற்றி பெற்றன.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான, 'மாஸ்டர்ஸ் பத்து ஓவர்' கிரிக்கெட் போட்டி, கடந்த, 28ம் தேதி துவங்கியது. தினசரி காலை 9:15 மணி; 11:45; மற்றும் மதியம் 2:15 மணி என, மூன்று போட்டிகள் கேப் சீசெம் மைதானத்தில் நடந்து வருகின்றன.
புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என, ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த போட்டியில் புதுச்சேரி வடக்கு மற்றும் தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய தெற்கு அணி, 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 81 ரன்கள் எடுத்தது. வடக்கு அணி கில்பர்ட் மற்றும் ரமேஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய வடக்கு அணி, 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில், 21 பந்துகளில் 43 ரன்கள் அடித்த நாராயணன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரிமேற்கு மற்றும் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில 5 விக்கெட்டுகள் இழந்து, 103 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஜெயக்குமார் - 38; ராஜா - 33, ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆடிய ஏனாம் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. புதுச்சேரி மேற்கு அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் ராஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில் மாகி மற்றும் காரைக்கால் அணிகள் மோதின. முதலில் ஆடிய, மாகி அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து, 116 ரன்களை குவித்தது. இதில், விஜீஷ் - 51; சஜூ சோட்டன் - 42, ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய காரைக்கால் அணி, 10 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மாகி அணியின் சந்தீப் 4 விக்கெட்டுகள், சஜூ சோட்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மாகி அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான செயல்பட்ட சஜூ சோட்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.