/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர் வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர்
வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர்
வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர்
வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர்
ADDED : ஜூன் 05, 2025 07:21 AM
புதுச்சேரி; சாரம் பகுதியை சேர்ந்த நபர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.
இதை நம்பிய, அவர் மர்மநபருக்கு 60 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், சாரத்தை சேர்ந்த பெண் 32 ஆயிரம், சோரப்பட்டை சேர்ந்த நபர் ஆயிரத்து 100, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த பெண் 1,000 என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 94 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.