ADDED : அக் 16, 2025 11:31 PM
புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பூமியான்பேட்டை, பாவாணர் நகர் அருகே அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த பாவாணர் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த காந்தி மகன் கார்த்திக், 24; என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


