UPDATED : மே 01, 2026 06:58 PM
ADDED : மே 01, 2026 06:51 PM

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது.
புதுச்சேரி - கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் அன்னம், சிம்மம், அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
பிரம்மோற்சவத்தின், 7ம் நாளன்று ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத சாரங்கபாணி பெருமாள் சுவாமி திருக்கல்யாண வைபவம், 8வது நாளன்று பரிவேட்டை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. இதில், மதிக்கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.
இன்று (2ம் தேதி) மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவம், நாளை 3ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.





