/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மின்துறை அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை : 50 பேர் கைது பாகூர் மின்துறை அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை : 50 பேர் கைது
பாகூர் மின்துறை அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை : 50 பேர் கைது
பாகூர் மின்துறை அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை : 50 பேர் கைது
பாகூர் மின்துறை அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை : 50 பேர் கைது
ADDED : மே 27, 2025 07:18 AM

பாகூர் : பாகூர் மின்துறை அலுவலகத்திற்கு, இளநிலை பொறியாளரை நியமிக்க வலியுறுத்தி, மா. கம்யூ., கட்சியினர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, மா. கம்யூ., பாகூர் கொம்யூன் குழு சார்பில் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினர்.
பாகூர் கமிட்டி உறுப்பினர் ஹரிதாஸ், பக்தவச்சலம், கவுசிகன், வடிவேலு, சேகர் கிளைச் செயலாளர்கள் முருகையன், ஆனந்தராமன், வெங்கடாசலம் உள் ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாகூர் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின் தடையை சரி செய்திட வேண்டும். பாகூர் மின்துறை அலுவலகத்திற்கு உடனடியாக இளநிலை பொறியாளரை நியமிக்க வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட்டு அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.