லாட்டரி விற்பனை லாரி டிரைவர் கைது
லாட்டரி விற்பனை லாரி டிரைவர் கைது
லாட்டரி விற்பனை லாரி டிரைவர் கைது
ADDED : ஜூன் 14, 2025 07:06 AM

திருபுவனை : திருபுவனை அருகே மூன்று நெம்பர் லாட்டரி விற்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவில் இந்திய உணவுக்கழக குடோன் பகுதியில் நேற்று முன்தினம் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு வாட்ஸ் ஆப் மூலம் மூன்று நெம்பர் லாட்டரி விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், திருவாண்டார்கோவில் மெயின்ரோட்டைச் சேர்ந்த சதிஷ்குமார் 41; லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சதிஷ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.