/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா
தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா
தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா
தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா
ADDED : ஜூன் 05, 2025 07:35 AM

புதுச்சேரி; பிரம்மோற்சவத்தையொட்டி, வரதராஜப் பெருமாள் நேற்று தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று பிராமணர் சமூகத்தினர் உற்சவம் நடைபெற்றது.
அதனையொட்டி நேற்று காலை சூர்ய பிரபை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற திருமஞ்சனத்தில் உற்சவதாரர்களான பிராமண சமுதாயத்தினர் திரளாக பங்கேற்றனர். மாலை தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜப் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
உற்சவ ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வேதராமன் மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.