/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி
கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி
கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி
கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி
ADDED : மார் 22, 2025 09:27 PM

புதுச்சேரி : கால்நடை துறை சார்பில் மங்கலம் தொகுதி கீழ் சாத்தமங்கலத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில், சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த கிடாரி, ஜெர்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் மற்றும் சண்டை சேவல், நாட்டுக்கோழி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோழிகள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட கால்நடைகள், கோழிகளுக்கு சிறப்பு பரிசும், பங்கேற்ற அனைத்து கால்நடைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கினார். கண்காட்சி ஏற்பாடுகளை கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர், மருத்துவர் மோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.