Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எழுத்தறிவு, எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு 

 எழுத்தறிவு, எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு 

 எழுத்தறிவு, எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு 


ADDED : மார் 22, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உல்லாஸ் திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நேற்று நடந்தது.

புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், மத்திய அரசின் நிதியுதவியுடன் உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு, 15 வயதிற்கு மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி பயின்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக கல்வி பயின்றவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு' நேற்று நடந்தது.

புதுச்சேரியில் 134 மையங்களில் 1,371 பேரும், காரைக்காலில் 46 மையங்களில் 345, ஏனாமில் 15 மையங்களில் 690 பேரும் தேர்வு எழுதினர். ​

காரைக்காலில் நடந்த தேர்வினை பள்ளிக்கல்வி இயக்குநர் சிவக்குமார், சாரம் அரசு தொடக்க பள்ளியில் நடந்த தேர்வினை, சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, திட்டத்தின் நோடல் அதிகாரி சுகுணா சுகிர்தபாய், பள்ளி துணை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் 'கற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us