/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
ADDED : ஜூன் 25, 2025 01:04 AM

அரியாங்குப்பம் : அம்பேத்கர் சட்டக் கல்லுாரி மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணைந்து, நியாய ஒளி திட்டத்தின் கீழ், மணவெளி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் விஜயா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் செல்வம், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அம்பேத்கர் சட்டக் கல்லுாரி முதல்வர் சீனுவாசன் நோக்கவுரை ஆற்றினார். உதவி பேராசிரியர் விஜயன், வழக்கறிஞர் செம்மலர் ஆகியோர் அடிப்படை மற்றும் குழந்தைகளுக்கான சட்டம் பற்றி பேசினார். தொடர்ந்து, போக்சோ சட்டம் பற்றி விளக்கம் அளித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.