/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 06:38 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு தோல்வி கண்டுள்ளது. சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலம் இருந்தும் அங்கு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜவுளி பூங்கா அமைப்பதற்கான எந்த முயற்சியும் இந்த அரசு எடுக்கவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட இணையவழி ஆப்கள் மூலம் உணவு டெலிவரி சேவையிலும், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவை மூலமாக மளிகை மற்றும் பிற பொருட்களின் டெலிவரி செய்யும் பணியில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு பணியிட பாதுகாப்போ, பணி நிரந்தரமோ கிடையாது.
இந்த ஊழியர்கள் உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் சூழலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இவர்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் அடிப்படை சலுகைகளையாவது வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட சேவையில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களின் நலன் காக்க நலவாரியம் அமைத்து அவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இல்லை எனில், புதுச்சேரி அமைப்புசாரா தொழிற்சங்கத்தில் உள்ள 26 பிரிவு தொழிலாளர்களோடு இவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.