ADDED : ஜன 29, 2024 06:25 AM
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு புதுகாலனியை சேர்ந்தவர் சுப்புராயன், 55; கூலி தொழிலாளி.
இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய சுப்புராயன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுப்புராயன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.