ADDED : டிச 06, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தில் உள்ள தில்லையம்மன் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், முதல்கால யாக சாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, இண்டாம் கால பூஜை, கோவிலில் உள்ள கணபதி, பாலமுருகன், கங்கையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, 10:30 மணிக்கு கோபுர விமானத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
சபாநாயகர் செல்வம் உட்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
