ADDED : செப் 09, 2025 06:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா நாளை (10 ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, இன்று மாலை முதல் கால யாகம், கணபதி பூஜை, பஞ்சகவ்யம், அங்குரம்பணம், ரக்ஷாய பந்தனம் முதல் கால கலச பூஜைகள், விசேஷ மந்திர பூஜைகள், ஹோமங்கள் பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை காலை இரண்டாம் கால யாகம், கோ பூஜை, விசேஷ அபிேஷகம், ஹோமம் பூர்ணாஹூதி, 108 கலச அபிேஷகம், மகா தீபாரதனை, 12:00 மணிக்கு அன்ன பெரும்படையல் நடக்கிறது.
இரவு சந்தனகாப்பு அலங்காரத்தில் முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது.