/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோலம், விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு கோலம், விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு
கோலம், விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு
கோலம், விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு
கோலம், விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு
ADDED : மார் 28, 2025 05:21 AM

புதுச்சேரி; லாஸ்பேட்டை தொகுதி, அசோக் நகரில் சப்தகிரி அறக்கட்டளை மற்றும் அசோக் நகர் மகளிர் அமைப்பு சார்பில் கோலம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. சப்தகிரி அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் சபாநாயகருமான சிவக்கொழுந்து, அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இதில், அசோக் நகர் மகளிர் அமைப்பினர், சப்தகிரி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நெருப்புகுழி மற்றும் லாஸ்பேட்டையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் தங்களை சப்தகிரி அறக்கட்டளையில் இணைத்து கொண்டனர்.