/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மழலையர் விளையாட்டு விழா; மண்டல அளவிலான போட்டிமழலையர் விளையாட்டு விழா; மண்டல அளவிலான போட்டி
மழலையர் விளையாட்டு விழா; மண்டல அளவிலான போட்டி
மழலையர் விளையாட்டு விழா; மண்டல அளவிலான போட்டி
மழலையர் விளையாட்டு விழா; மண்டல அளவிலான போட்டி
ADDED : பிப் 24, 2024 06:33 AM

புதுச்சேரி : மழலையர் விளையாட்டு விழாவின் மண்டல அளவிலான போட்டி நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி., 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மழலையர் விளையாட்டு விழா ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான மழலையர் விளையாட்டு விழா, வட்ட அளவிலான போட்டிகள் ஓட்டப் பந்தயம், பந்து எறிதல், தவளை ஓட்டம், வாத்து ஓட்டம், கங்காரு ஓட்டம், கயிறு இழுத்தல், பவுலிங் துரோ முறையில் கர்லா கட்டை நகர்த்துதல், குறிபார்த்து பந்து எறிதல் போட்டிகள் கடந்த 8 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இப்போட்டியில் முதல் மற்றும் 2வது இடம் பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான போட்டிகள் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. 5 வட்டங்களில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியை பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தார். தொடக்க கல்வி துணை இயக்குநர் முனுசாமி முன்னிலை வகித்தார்.
வெற்றி பெற்ற மணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜவகர் சிறுவர் இல்ல தலைமை ஆசிரியர் மணிவேல், ஆசிரியர் செல்வதாஸ், உடற்கல்வி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.