Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் ஸ்டேஷன்களில்  கட்டப்பஞ்சாயத்து 

போலீஸ் ஸ்டேஷன்களில்  கட்டப்பஞ்சாயத்து 

போலீஸ் ஸ்டேஷன்களில்  கட்டப்பஞ்சாயத்து 

போலீஸ் ஸ்டேஷன்களில்  கட்டப்பஞ்சாயத்து 

ADDED : மார் 18, 2025 04:18 AM


Google News
அங்காளன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது;

பிற மாநிலங்களில் மின்துறை கார்ப்பரேஷன், வாரியமாக உள்ளது. புதுச்சேரியில் வாரியமாக இல்லாத மின்துறையை எப்படி தனியார் மயமாக்க முடியும். மின்துறையில் டிஜிட்டல் மீட்டர், ஸ்மார்ட், மெக்கானிக் மீட்டர் என 3 விதமான மீட்டர் பயன்படுத்துகின்றனர்.

இவற்றில், மின் உபயோகம் வேறுபாடு இருக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். மின்சாரம் வாங்க ரூ. 2,546 கோடி ஒதுக்கி, மானியமாக அளிப்பதால், அதில் எப்படி லாப நஷ்டம் பார்க்க முடியும்.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு குடும்ப மின் கட்டண பில்லில் ரூ. 200 முதல் ரூ. 850 வரை எப்படி சர்சார்ஜ், எப்.சி., சார்ஜ் விதிக்கிறது. விவசாயிகளுக்கு கொடுத்துள்ள பழைய கால மெக்கானிக் மீட்டர்கள் பழுதாகி கிடக்கிறது. மின்துறையில் 147 கோடி நஷ்டம் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையில் சுகாதார இயக்ககம் மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்களுக்கான மருந்துகளை வீடு தேடி சென்று வழங்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இ-மெடிக்கல் கார்டு வழங்க வேண்டும்.

ரவுடிகளுக்குள் பழிக்கு பழியாக கொலை நடக்கிறது. போலீசாரால் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் அளவில் கட்டபஞ்சாயத்து நடக்கிறது.

ஒரே போலீஸ் நிலையத்தில் நீண்டகாலம் பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும். பி.சி.ஆர்., காவல் நிலையத்தில் பொய் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us