ADDED : ஜன 10, 2024 11:03 PM
காரைக்கால்: காரைக்காலில் தொடர் மழை காரணமாக கார்னிவல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை காரைக்காலில் கார்னிவல் நடத்த ஏற்பாடு செய்தது. இதன் ஒரு அங்கமாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடக்க இருந்த மலர், காய், கனி கண்காட்சி -2024, தொடர் மழையின் காரணமாக வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது.
இதனை முன்னிட்டு தானியம், காய் மற்றும் கனிகளைக் கொண்டு படிமம் (கார்விங்) தயாரித்தல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், நிறுவனத் தோட்டம், பூந்தொட்டி சேகரிப்பு மற்றும் மூலிகை செடிகள் சேகரிப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.
இப்போட்டிகளில் அதிக பரிசுகள் பெறுவோருக்கு 'மலர் ராஜா' மற்றும் 'மலர் ராணி' விருதுகள் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், வேளாண் துறையை அணுகி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.