Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்ணதாசன் பிறந்தநாள் விழா

கண்ணதாசன் பிறந்தநாள் விழா

கண்ணதாசன் பிறந்தநாள் விழா

கண்ணதாசன் பிறந்தநாள் விழா

ADDED : ஜூலை 02, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் செம்மொழி நாள் மற்றும் கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடந்தது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன் முன்னிலை வகித்தார்.

விழாவில், தமிழியக்கம் பொதுச் செயலாளர் அப்துல் காதருக்கு, 'செம்மொழி அறிஞர்' விருதினை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுத்து வழங்கினார். தொடர்ந்து அப்துல் காதர் 'முத்துக்குள் கடல்' தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பட்டிமன்ற பேச்சாளர் உமா அமலோற்பவமேரி தலைமையில் 'படைத்ததனால் அவன் பேர் இறைவன்' தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

இதில், இளவரசி சங்கர், கற்பகம், திவ்யா, லாவண்யா ஆகியோர் கவிதை வசித்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர் உசேன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us