ADDED : ஜூன் 11, 2025 07:37 AM

பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், 'காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
புதுச்சேரி மாநிலம், பாகூரில் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜிய ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் வழிகாட்டுதலின் படி 'காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
இதையொட்டி, காலை 5:00 மணிக்கு மூலநாதர், வேதம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு காஞ்சி மகா பெரியவா படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.