/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.சி.ஆரை விரிவுபடுத்த வேண்டும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை இ.சி.ஆரை விரிவுபடுத்த வேண்டும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை
இ.சி.ஆரை விரிவுபடுத்த வேண்டும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை
இ.சி.ஆரை விரிவுபடுத்த வேண்டும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை
இ.சி.ஆரை விரிவுபடுத்த வேண்டும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 26, 2025 03:49 AM
புதுச்சேரி : சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
லாஸ்பேட்டை தொகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டு மினி ஹாஸ்பிட்டல் வசதி ஏற்படுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு டிரைவர் மற்றும் உதவியாளர் வழங்கிட வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதாந்திர டீசல் அலவன்சை ரூ.30 ஆயிரத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சட்டசபை நிகழ்வுகளை ஆப் லைனில் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். நாவற்குளம் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரி செய்திட வேண்டும். ஐ.ஆர்.பி.என்., போலீசாரை, குறிப்பிட்ட ஆண்டிற்கு பிறகு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிற பிரிவுகளில் சேர்த்திட வேண்டும். போலீசாருக்கு அரசே இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
காலாப்பட்டு தொகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட நான்கு மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைத்திட வேண்டும். விபத்துகளை தவிர்த்திட தமிழக அரசை பின்பற்றி, புதுச்சேரி அரசும் கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்த வேண்டும்.