ADDED : அக் 01, 2025 11:23 PM
அரியாங்குப்பம்: வட்டம் 3 சார்பில், பள்ளிகளுக்கிடையே, நடந்த கபடி போட்டியில், வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், 3ம் வட்டத்திற்கான கபடி போட்டி, அபிேஷகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில், நடந்தது.போட்டியில், வட்டத்திற்கு உட்பட்ட 48 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


