/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிவப்பு ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கல்சிவப்பு ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
சிவப்பு ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
சிவப்பு ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
சிவப்பு ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
ADDED : பிப் 25, 2024 04:28 AM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 540 பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காமராஜ் வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., 540 பயனாளிகளுக்கு சிவப்பு நிற கார்டுகள் வழங்கி, பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், குடிமை பொருள் வழங்கல் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன், பாஸ்கரன், குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.