/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தப்பா? ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தப்பா?
ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தப்பா?
ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தப்பா?
ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தப்பா?
ADDED : மார் 28, 2025 05:22 AM
புதுச்சேரி; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு கொண்டு வரப்பட்ட தனிநபர் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, மத்தியில் இருக்கின்ற பா.ஜ., அரசு ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற அரசாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.,சை பொறுத்தவரை அதிகாரம் என்பது ஒரே இடத்தில் குவிக்கப்பட வேண்டுமே தவிர பரவலாக்கப்படக் கூடாது என்பதாகும். இந்த நாட்டில் மாநிலங்கள் தொடர் வதைக்கூட ஆர்.எஸ்.எஸ்., அனுமதிப்பதில்லை. வெறும் மாவட்டங்களை வைத்துக்கொண்டு டில்லியில் அதிகாரம் செய்ய முடியும் என்ற கொள்கையுடையது ஆர்.எஸ்.எஸ்.,
அதனால் தான் விடுதலைப் பெற்ற காலத்தில் இருந்து தனி மாநிலமாக விளங்கிய ஜம்மு காஷ்மீரை 370-ஐ காரணம் காட்டி மாநில தகுதியை பிடுங்கி இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டனர் என்றார்.
இதற்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசினை ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்த அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்லியுள்ளார். அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.
அதற்கு பதிலடித்து கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் சிவா,பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். அப்படியென்றால் அது ஆர்.எஸ்.எஸ்., சிந்தாந்தம் கிடையாதா என்று கேள்வியை எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் செல்வம், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பது தவறானது அல்ல. எனவே, அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றதும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாகி அமர்ந்தனர்.