/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுதந்திர தின அணிவகுப்பில் விலக்கு ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கோரிக்கை சுதந்திர தின அணிவகுப்பில் விலக்கு ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கோரிக்கை
சுதந்திர தின அணிவகுப்பில் விலக்கு ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கோரிக்கை
சுதந்திர தின அணிவகுப்பில் விலக்கு ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கோரிக்கை
சுதந்திர தின அணிவகுப்பில் விலக்கு ஐ.ஆர்.பி.என்., போலீஸ் கோரிக்கை
ADDED : செப் 18, 2025 02:59 AM
புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில், ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், போலீஸ் துறையில் சீனியரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு, ஏ.எஸ்.ஐ., பதவிக்கான அங்கீகாரம் பணி வழங்க வேண்டும், குடியரசு தின, சுதந்திர தின அணி வகுப்பில் இருந்து விலக்களிக்க வேண்டும். அமைச்சகம் ஊழியர்கள் நியமிக்க வேண்டும், வாகன வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், தனி அலுவலகம், நிரந்தர இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
போலீசாரின் கோரிக்கைகளை ஏற்ற டி.ஐ.ஜி., இதுகுறித்து பரிசீலனை செய்து, விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.