Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.பி.எல்., கிரிக்கெட் 'பெட்டிங்' சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஐ.பி.எல்., கிரிக்கெட் 'பெட்டிங்' சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஐ.பி.எல்., கிரிக்கெட் 'பெட்டிங்' சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஐ.பி.எல்., கிரிக்கெட் 'பெட்டிங்' சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ADDED : மார் 26, 2025 04:49 AM


Google News
புதுச்சேரி, : ஐ.பி.எல்., கிரிக்கெட் வெற்றி குறித்து தனியார் செயலிகள் மூலம் இணையவழி மோசடிக்காரர்கள் போலி செயலிகள் பயன்படுத்த வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் வெற்றி வாய்ப்புகளையும், வீரர்களின் தரங்களை பொருத்து பெட்டிங் எனப்படும் தனியார் செயலிகள் போன்று மோசடிக் காரர்கள் போலி செயலிகளில் பொதுமக்கள் பணத்தை பெட்டிங் கட்டி ஏமாற வேண்டாம். ஓட்டல்கள், பார், ரெஸ்ட்டோபார் மற்றும் தனியார் இடங்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி பெட்டிங் நடக்கிறதா என சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அப்படி யாராவது சிக்கினால் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

ஐ.பி.எல்., சம்பந்தமாக இணையவழியில் குற்றம் ஏதேனும் நடக்கிறதா என்பது குறித்து தனிப்படை வைத்து கண்காணிக்கப்படுகிறது.

பொதுமக்கள் யாரேனும் ஐ.பி.எல்., பெட்டிங் மூலம் பணத்தை இழந்திருந்தாலும், ஐ.பி.எல்., பெட்டிங் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்திருந்தாலும், பாதிக்கபட்டிருந்தாலும் உடனடியாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413- 2276144, 9489205246 எண்கள் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூல மாகவும் புகார் அளிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us