ADDED : ஜூன் 14, 2025 10:35 PM
பாகூர் : இந்திய கம்யூ., பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் கிளை மாநாடு நேற்று நடந்தது.
தியாகி பரமசிவம் மாநாட்டு கொடியேற்றினார். அகில இந்திய தலித் இயக்க தலைவர் ராமமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
கிளை செயலாளர் உதயகுமார் வேலை அறிக்கை வாசித்தார். தொகுதி செயளாலர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் விஜயபாலன், தலித் இயக்க மாநில தலைவர் ராஜா ஆகியோர்வாழ்த்தி பேசினர்.
மாநாட்டில்,காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை சீரமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.