/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆரோவில் கலா கேந்திராவில் விஷ்ணு சிலை திறப்புஆரோவில் கலா கேந்திராவில் விஷ்ணு சிலை திறப்பு
ஆரோவில் கலா கேந்திராவில் விஷ்ணு சிலை திறப்பு
ஆரோவில் கலா கேந்திராவில் விஷ்ணு சிலை திறப்பு
ஆரோவில் கலா கேந்திராவில் விஷ்ணு சிலை திறப்பு
ADDED : பிப் 12, 2024 06:47 AM

வானூர் : புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாஸ் கலா கேந்திரா அரங்கில், இளஞ்சிவப்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீட்டரில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பாரத் நிவாஸ் கலாகேந்திராவில் பல்வேறு கண்காட்சிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று இளஞ்சிவப்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சாமி சிலை திறப்பு விழா நடந்தது.
ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார். துணை செயலாளர் ஐ.பி.எஸ்., அதிகாரி சொர்ணாம்பிகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை பங்கேற்று, கலைநயமிக்க விஷ்ணு சிலையை திறந்து வைத்து, கலாகேந்திராவில் உள்ள கண்காட்சியை பார்வையிட்டார்.
துவக்க விழாவில் அவர் பேசுகையில், கலைகள் அனைத்தும் தர்மத்தை முன்னிலைப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்மையே வெல்லும் என்பதும், நமது நாட்டின் தாரக மந்திரமாகவும் இருந்து வருகிறது. ராமாயணம் போன்ற இதிகாசங்களில் தர்மம் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. நாம் செய்யும் செயல்களில் தர்மமும், நேர்மையும் இருக்க வேண்டும். இதனை கடைபிடித்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைப்பது உறுதி என்றார்.
நிகழ்ச்சியில் ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.