/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளையராஜா இசை கச்சேரி போக்குவரத்து மாற்றம் இளையராஜா இசை கச்சேரி போக்குவரத்து மாற்றம்
இளையராஜா இசை கச்சேரி போக்குவரத்து மாற்றம்
இளையராஜா இசை கச்சேரி போக்குவரத்து மாற்றம்
இளையராஜா இசை கச்சேரி போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 14, 2025 07:01 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இளையராஜா இன்னிசை கச்சேரி நடைபெறுவதையொட்டி, இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து வடக்கு எஸ்.பி., செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலை, புதிய துறைமுக எக்ஸ்போ மைதானத்தில் இளையராஜா இசை கச்சேரி இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, இசை நிகழ்ச்சிக்கு வரும் கார்கள், நடுத்தர வாகனங்கள், அனைத்தும் புதுச்சேரி அம்பேத்கர் சாலையில் உள்ள புதிய துறைமுகத்தின் மெயின் நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் அனைத்தும், மேற்கு பக்க நுழைவு வாயில்கள் வழியாக உள்ளே செல்ல வேண்டும். இசை நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் வாகனங்கள் மெயின் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்று அம்பேத்கர் சாலை, உப்பளம் சாலையில் சோனாம்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் அனைத்தும் புதிய துறைமுகம், முதலியார்பேட்டை, கடலுார் சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.