ADDED : செப் 09, 2025 07:08 AM
காரைக்கால்; காரைக்கால் நெடுங்காடு தொண்டமங்களம் ஆற்றங்கரைத் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரேசன், 34; கொத்தனார். இவர் திருச்செந்துாரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒருவயதில் ஆண் குழந்தை உள்ளது.
குமரேசன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததால் மனைவி கோபித்துகொண்டு வேறு ஒருவருடன் வெளியூர் சென்றுள்ளார்.இதனால் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. இதனால் மனமுடைந்த குமரேசன் நேற்று முன்தினம் மூங்கில் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.