/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்னணு கழிவுகளை அகற்றுவது எப்படி? மின்னணு கழிவுகளை அகற்றுவது எப்படி?
மின்னணு கழிவுகளை அகற்றுவது எப்படி?
மின்னணு கழிவுகளை அகற்றுவது எப்படி?
மின்னணு கழிவுகளை அகற்றுவது எப்படி?
ADDED : செப் 20, 2025 06:42 AM

புதுச்சேரி: காலாப்பட்டு, பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பூங்குன்றன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
கிளீன் டு கிரீன் இந்தியா புதுச்சேரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோவா மார்க்கஸ், மின்னணு கழிவுகள் குறித்தும், மின்னணு கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது குறித்தும் விளக்கம் அளித்தார்.
பின், மாணவிகள் இடையே கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சமுதாய நலப்பணித் திட்ட ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மின்னணு கழிவுகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.