ADDED : பிப் 11, 2024 02:46 AM
நெட்டப்பாக்கம்: மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளியின் கூரை வீடு எரிந்து சாம்பாலனாது.
நெட்பாக்ககம் அடுத்த கரையாம்புத்துார், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சரசு, 42; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
டி.வி., அலமாரி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்து குறித்து கரையாம்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.