/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆரோவில்லில் குதிரை ஏற்ற போட்டி 18ல் துவக்கம்ஆரோவில்லில் குதிரை ஏற்ற போட்டி 18ல் துவக்கம்
ஆரோவில்லில் குதிரை ஏற்ற போட்டி 18ல் துவக்கம்
ஆரோவில்லில் குதிரை ஏற்ற போட்டி 18ல் துவக்கம்
ஆரோவில்லில் குதிரை ஏற்ற போட்டி 18ல் துவக்கம்
ADDED : ஜன 13, 2024 06:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி வரும் 18ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து, குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி நிறுவனர் ஜாக்லீன் கூறியதாவது:
புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியும், சுற்றுலாத்துறை இணைந்து தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டியை நடத்துகிறது.
இப்போட்டி வரும் 18ம் முதல் துவங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை போட்டி நடைபெறுகிறது.
இதில் சென்னை, பெங்களூர், கோவை, ஊட்டி, ஜெய்பூர், மும்பை, ஹைதராபாத், டில்லி, கொல்கத்தா, புதுச்சேரி மற்றும் ஆரோவில்லைச் சேர்ந்த தலைசிறந்த 40 வீரர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
போட்டியின், நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 பேர் கலந்துகொள்கின்றனர்.
டிரஸ்சாஜ் என்ற ஒரே பிரிவில் மட்டுமே இந்த போட்டி நடக்கிறது. டிரஸ்சாஜ் என்றால் குதிரையை பயிற்றுவித்தல். குதிரைக்கும் - வீரருக்கும் உள்ள பயிற்சி மற்றும் அதனை எப்படி கட்டுப்படுத்துதல் என்பது குறித்து, இந்த போட்டி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தேசிய சாம்பியன்ஷிப் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசளிப்பு விழா ஜூன் 26ம் தேதி நடக்கிறது என அவர் தெரிவித்தார்.