Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து

ADDED : செப் 09, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார் : உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை சித்தானந்த கோவில், மணக்குள விநாயகர் கோவில் மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள குலதெய்வம் கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து வழிபட்டார்.

வீட்டில் தனது பெற்றோர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சார்ட், ரமேஷ், ஏ.கே.டி ஆறுமுகம், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், பாஸ்கரன், செல்வம், பா.ஜ மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து.

முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் தமிழ்ச்செல்வம், வெங்கடேசன், அசோக்பாபு, அருள்முருகன், முன்னாள் சேர்மன் பாலமுருகன், மண்ணாடிப்பட்டு முத்தழகன், மணக்குளர் ரியல் ஏஜென்சி கார்த்திகேயன், சாம்ராஜ், காமராஜ், கார்த்திக், பாரதிதாசன் கேம்ரோன், மோகித் ரவிக்குமார்,பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் அருணகிரி,மகளிர் அணி ஓம் அனிதா, என்.எம்.எஸ் குருப்ஸ் முருகசாமி.

தொகுதி பொறுப்பாளர்கள் கண்ணபிரான், செல்வகணபதி, பாஸ்கரன், கொம்பாக்கம்கனகராஜ், புருேஷாத்தம்மன், வில்லியனுார் சம்பத், ஜெயவள்ளி வெங்கடேசன், அங்குதாஸ்,வெண்ணிசாமி நகர் பரஞ்ஜோதி, பா.ஜ., இளைஞர் அணி வருண்,ஜோதிவள்ளலார் பள்ளி தாளாளர் ராமலிங்கம், மண்ணாடிப்பட்டு தொகுதி மஞ்சினி, தமிழ்மணி, சையது, சிவக்குமார், கலியபெருமாள் மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி, கவர்னர் கைலாஷ்நாதன், த.மா.க தலைவர் வாசன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us