/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு
ADDED : ஜூன் 30, 2025 03:50 AM

புதுச்சேரி : பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான, விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி பங்கேற்றார்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியில், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, சென்னை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி, பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ், புதுச்சேரி சட்டக்கல்லுாரி மாணவர்கள், நீதித்துறை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி நன்றி கூறினார்.